மேலும் செய்திகள்
தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா!
1129 days ago
ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள்
1129 days ago
250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி'
1129 days ago
பார்ட்-2 ஜுரம் தற்போது தென்னிந்திய சினிமாவை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளது என்றே தோன்றுகிறது. சமீபத்தில் கேஜிஎப்-2 படம் ஹிட்டடிக்க, அடுத்தததாக புஷ்பா-2, இந்தியன்-2 ஆகிய படங்கள் களத்தில் இருக்கின்றன. ஜீவி-2 என்கிற படம் கூட சத்தமில்லாமல் ஒடிடியில் ரிலீஸாகி விட்டது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன், துல்கர் சல்மான் நடித்த சீதாராமம் படம் ரசிகர்ளிடம் வரவேற்பை பெற்றதில் துல்கரின் மார்க்கெட் வேல்யூ நன்றாகவே உயர்ந்துள்ளது.
கடந்த 2014ல் துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'விக்ரமாதித்யன்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பிளான் செய்திருக்கிறார் அந்தப்படத்தின் இயக்குனரான லால்ஜோஸ். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னரே இப்படி ஒரு பேச்சு எழுந்து அது அப்படியே அமுங்கி விட்டது. இந்தநிலையில் தமிழ், மலையாளம், தற்போது தெலுங்கு என ஹிட் கொடுத்து துல்கர் சல்மான் வெற்றிமுகம் காட்டி வருவதால் இப்போது விக்ரமாதித்யன் பார்ட்-2 எடுத்தால் சரியாக இருக்கும் என நினைக்கிறாராம் இயக்குனர் லால்ஜோஸ்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பாசிடிவான பதிலை கூறியுள்ளார் லால்ஜோஸ். முதல் பாகத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருந்த உன்னிமுகுந்தன், கெஸ்ட் ரோலில் நடித்திருந்த நிவின்பாலி ஆகியோரையும் இந்தப்படத்திலும் இணைத்துக்கொள்ள முடிவுசெய்துள்ளாராம் லால்ஜோஸ்.
1129 days ago
1129 days ago
1129 days ago