மேலும் செய்திகள்
மலையாள சினிமாவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'லோகா'
1104 days ago
சைஸ் ஜீரோ தோற்றத்துக்கு மாறும் தமன்னா
1104 days ago
‛வீரம்' குழந்தை நட்சத்திரம் யுவினா நடிக்கும் ரைட்
1104 days ago
‛டாக்டர், எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரியங்கா மோகன் தற்போது, ஜெயம்ரவியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், 200 ஆண்டு பாரம்பரியமான யார்ட்லி டால்கம் பவுடர் நிறுவன விளம்பர துாதராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அளித்த பேட்டி:
அழகு என்பது வெளிப்புறத்தில் இல்லை. எண்ணங்கள் தான் நம்மை அழகாக்கும். வாடிக்கையாளரை 200 ஆண்டுகளாக தக்க வைத்துக் கொண்ட யார்ட்லிக்கு நான் விளம்பர துாதராக இருப்பது கவுரவமாகவே பார்க்கிறேன். நான் ‛ஜெயிலர்' படத்தில் நடிப்பதாக கூறுகின்றனர். அந்த மாதிரி எதுவும் இல்லை. மற்ற மொழிகளை விட, என் தாயின் மொழி என்பதால், தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும். அதிக சம்பளம் மற்றும் நம்பர் ஒன் வருவது என் குறிக்கோள் அல்ல. நல்ல படங்களில் நடித்தால் போதும். வெற்றி, தோல்வி எதுவானாலும் ஒருவர் மீது மட்டுமே குற்றம் சுமத்த முடியாது. அப்படி செய்யவும் கூடாது. சிறு வயதில் இருந்தே எனக்கு அரசியல் ஆசை இல்லை. என் வேலையை ரசித்து செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.
1104 days ago
1104 days ago
1104 days ago