மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
1083 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
1083 days ago
சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம்
1083 days ago
பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களான அமீர் - பாவ்னியின் காதல் விவகாரம் தற்போது அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த அமீர் அப்போதே பாவ்னியிடம் லவ் புரோபோஸ் செய்திருந்தார். தொடர்ந்து இருவரும் பிக்பாஸ் ஜோடிகள் 2-வில் ஜோடியாக நடனமாடி டைட்டில் பட்டத்தையும் வென்றனர். அந்த நிகழ்ச்சியிலேயே அமீரின் புரோபோஸலை பாவ்னியும் ஓகே செய்தார். இதனையடுத்து இருவருக்கும் எப்போது திருமணம் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், அமீர்-பாவ்னி இருவரும் இந்து, முஸ்லீம் முறைப்படி ஒரே மேடையில் திருமணம் செய்வது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் ரசிகர்கள் அமீர் - பாவ்னிக்கு உண்மையிலேயே திருமணம் முடிந்துவிட்டதா என ஷாக் ஆகியுள்ளனர். ஆனால், அது நிஜ திருமணம் அல்ல. அமீர்- பாவ்னி இருவரும் 'செந்தாமரையே' என்ற காதல் ஆல்பம் பாடலில் ஜோடியாக நடித்துள்ளனர். அந்த பாடலின் இறுதியில் இடம் பெற்றிருக்கும் காட்சி தான் அது. தற்போது இந்த பாடலானது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நிஜ திருமணத்திற்கு இப்போதே ஒத்திகையா? என பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.
1083 days ago
1083 days ago
1083 days ago