மீண்டும் கவர்ச்சி போட்டோ ஷுட்டில் ரம்யா பாண்டியன்
ADDED : 1117 days ago
தமிழில் நடித்தது சில படங்கள்தான் என்றாலும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன். இடுப்பு தெரிய சேலை அணிந்து அவர் எடுத்த புகைப்படங்கள் அவரை மூலை முடுக்குகளில் கூட கொண்டு போய் சேர்த்தது.
'குக் வித் கோமாளி, பிக் பாஸ்' உள்ளிட்ட சில டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை. அதனால் கவர்ச்சியாகவும் நடிக்கத் தயார் என வெளிப்படுத்தும் அளவிற்கு சமீபமாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறாரோ என கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
சில தினங்களக்கு முன்பு கருப்பு நிற ஆடையுடன் சில கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டவர், தற்போது வெள்ளை நிற உள்ளாடையுடன் கவர்ச்சி சில புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். 'தண்ணீர் மீது அன்னம்' என தனது புகைப்படங்களுக்கு 'கேப்ஷன்' கொடுத்துள்ளார் ரம்யா.