மேலும் செய்திகள்
பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா
1078 days ago
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
1078 days ago
புஷ்கர் காயத்ரி இயக்கத்தில், சாம் இசையமைப்பில், மாதவன், விஜய் சேதுபதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் மற்றும் பலர் நடிப்பில் 2017ம் ஆண்டில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'விக்ரம் வேதா'.
இப்படத்தை ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன், சைப் அலிகான், ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடிக்க ரீமேக் செய்துள்ளார்கள். தமிழில் படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி தான் ஹிந்தியிலும் இயக்கியுள்ளார்கள். வரும் செப்டம்பர் 30ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
ஹிந்திப் படத்தின் நேரம் 2 மணி நேரம் 40 நிமிடமாம். தமிழ்ப் படத்தை விட கூடுதலாக 13 நிமிடங்கள். ஹிந்திக்காக சில காட்சிகளை சேர்த்திருக்கிறார்களாம். அதனால் தான் கூடுதல் நேரம். ஹிந்திப் படத்திற்கான முன்பதிவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்திற்கான வரவேற்பு எப்படி இருக்கப் போகிறது என்பதை ஹிந்தித் திரையுலகம் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது.
1078 days ago
1078 days ago