உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிம்புவுடன் கூட்டணி வைக்கும் பார்த்திபன்

சிம்புவுடன் கூட்டணி வைக்கும் பார்த்திபன்

இரவின் நிழல் என்ற படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் சின்ன பழுவேட்டரையர் என்ற வேடத்தில் நடித்திருந்தார் பார்த்திபன். இந்த நிலையில் அடுத்தபடியாக சிம்புவுடன் தான் கூட்டணி வைக்கப் போவதாக ஒரு பதிவு போட்டு இருக்கிறார். அந்த பதிவில், ஒரு இரவின் ஒளியில் 10 தலையுடன் பத்து தலையின் மொத்த மூளையும் ஒத்த தலையில். விசேட திறமையை பெற்றவர், பெற்றவரிடம் இருந்தும் தான் பெரும் அனுபவத்தில் இருந்தும் கற்றவர். சந்திக்கும்போது மட்டும் இணையும் நாள் குறித்து சிந்திப்போம். இணையும் நாளில் வெற்றியை சந்திப்போம் என்று சிம்புவுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் குறிப்பிட்டு இருக்கிறார் பார்த்திபன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !