மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1056 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1056 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1056 days ago
சந்தானம் நடித்து முடித்துள்ள படம் ஏஜெண்ட் கண்ணாயிரம். வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய மனோஜ் பீதா இயக்கி உள்ளார். ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் இது. ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், முனிஷ்காந்த் மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர்உள்ளனர். லேபிரிந்த் பிலிம்ஸ் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் மற்றும் சரவணன் ராமசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் மனோஜ் பீதா கூறியதாவது: இது தெலுங்கு படத்தின் ரீமேக்தான் என்றாலும் பல மாற்றங்களை செய்திருக்கிறேன். இது சந்தானம் நடிக்கும் வழக்கமான காமெடி படம் அல்ல. அவரது பன்ஞ் டயலாக்கோ, டைமிங் டயலாக்கோ இருக்காது. கதாநாயகி இருந்தாலும் காதலோ, ரொமான்சோ இருக்காது.
சந்தானத்தை இதுவரை பார்க்காத கோணத்தில் காட்ட முயற்சித்திருக்கிறோம். இந்த படத்தில் அவர் ஏஜெண்ட் கண்ணாயிரமாகத்தான் தெரிவாரே தவிர சந்தானமாக தெரிய மாட்டார். இது மத ரீதியான ஒரு பிரச்னையை பற்றி துப்பறிகிற கதை. ஆனால் எந்த மதத்தையும் குறிப்பிட்டு படத்தை எடுக்கவில்லை. இதனூடே ஒரு தாய்க்கும், மகனுக்குமான பிணைப்பையும் படம் சொல்லும். காமெடி, ஆக்ஷன் போன்றவை கதைக்கு ஏற்றபடி ஆங்காங்கே இருக்கும். இந்த படம் சந்தானத்தின் கேரியரில் முக்கியமான படமாகவும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
1056 days ago
1056 days ago
1056 days ago