நாக சவுர்யாவுக்கு நவம்பர் 20ல் திருமணம்
ADDED : 1220 days ago
இயக்குனர் விஜய் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் இயக்கிய 'தியா' படத்தில் நாயகனாக நடித்தவர் தெலுங்கு நடிகர் நாக சவுர்யா. கடந்த 2011ல் தெலுங்கில் கதாநாயகனாக அறிமுகமான இவர் கிட்டத்தட்ட 25 படங்கள் வரை நடித்துள்ளார். இந்த நிலையில் வரும் நவம்பர் 20ம் தேதி இவரது திருமணம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த அனிஷா ஷெட்டி என்பவரைத்தான் நாக சவுர்யா திருமணம் செய்கிறார். மணப்பெண் அனிஷா பெங்களூரில் இன்டீரியர் டெக்கரேஷன் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது திருமணம் பெங்களூரில் தான் நடைபெற உள்ளது. நவம்பர் 19ம் தேதி முதல் திருமண நிகழ்வுகள் துவங்க இருக்கின்றன. இது காதல் திருமணமா இல்லை நிச்சயக்கப்பட்ட திருமணமா என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.