மேலும் செய்திகள்
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1005 days ago
நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர்
1005 days ago
'வெந்து தணிந்தது காடு' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'பத்து தல'. இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து கவுதம் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிருஷ்ணா இயக்கியுள்ளார். கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகிறது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
கன்னியாகுமரி, பெல்லாரி, விசாகாப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது படத்தின் மற்றபணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் பத்து தல படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி 2023 மார்ச் 30ல் படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1005 days ago
1005 days ago