விஜய்யின் 67 படத்தின் படப்பிடிப்பு துவங்கியது
ADDED : 1166 days ago
கடந்தாண்டு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து அவர் வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். பொங்கலுக்கு படம் வெளியாக உள்ளது. இந்த படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் 67 வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். மாஸ்டர் படத்திற்கு பின் மீண்டும் இவர்கள் இணைகின்றனர். அனிருத் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது. திரிஷா, சஞ்சய் தத், இயக்குனர் மிஷ்கின், கவுதம் மேனன் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இன்று சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது . இந்த தகவலை நடிகர் மனோபாலா தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், விஜய் 67 படப்பிடிப்பு இன்று(ஜன., 2) துவங்கியது . லோகேஷ் மற்றும் விஜய்யை சந்தித்ததில் மகிழ்ச்சி என கூறியுள்ளார் .