மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
963 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
963 days ago
வெளிநாடுகளில் விஜய் படங்கள் அதிகம் வசூலிக்கும் நாடுகளில் யுகே என சுருக்கமாக அழைக்கப்படும் யுனைட்டெட் கிங்டம் நாடுகளான இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகியவையும் அடங்கும். அங்கு விஜய் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'வாரிசு' படமும் அதிக தியேட்டர்களில் வெளியானது.
பொங்கலுக்கு வெளியான 'துணிவு', தெலுங்குப் படங்களான 'வால்டர் வீரய்யா, வீரசிம்ஹா ரெட்டி' ஆகிய படங்களைக் காட்டிலும் 'வாரிசு' படம் அதிக வசூலைக் குவித்து வருகிறது. அங்கு இதுவரையிலும் 5 லட்சம் பவுண்டுக்கும் அதிகமான வசூலை இந்தப் படம் குவித்துள்ளது. 'பீஸ்ட்' படம் 5 லட்சத்து 5 பவுண்டுகளை வசூலித்திருந்தது. அந்த சாதனையை தற்போது 'வாரிசு' படம் 5,42,242 பவுண்டுகள் வசூலித்து முறியடித்துள்ளது. இதை படத்தை அங்கு வெளியிட்டுள்ள அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பொங்கல் போட்டியில் வெளிநாடுகளில் 'துணிவு' படத்தை விடவும் 'வாரிசு' படத்தின் வசூல் தான் அதிகம். ஆனால், அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதால் பல நாடுகளில் இன்னும் லாபக் கணக்கை ஆரம்பிக்கவில்லை என்கிறார்கள்.
963 days ago
963 days ago