மேலும் செய்திகள்
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
973 days ago
செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
973 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
973 days ago
விஞ்ஞானத்தை ஒட்டிய கற்பனை கதைகளை சயின்ஸ் பிக்சன் படம் என்பார்கள். அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் என்றால் விஞ்ஞானத்துக்கும் அப்பாற்பட்ட கற்பனை கதை, உதாரணமாக வேற்று கிரகத்தில் இருந்து மனிதர்கள் வருவது, மனிதர்கள் வேற்று கிரகத்தில் செல்வது மாதிரியான கதை. அதற்கு உதாரணம் அவதார். இந்த வகையான படங்கள் தமிழில் வரவில்லை.
முதன் முறையாக சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் இந்த வகை படம் என்கிறார்கள். இதே போன்று மற்றொரு படம் தயாராக இருக்கிறது. அதன் டைட்டில் ‛சண்டே'. இதனை புளூபெரி ஸ்டூடியோ தயாரிக்கிறது. சதீஷ் கீதா குமார், நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்குகிறார்க்கள். இப்படத்தில் ஆதித்யா டிவி புகழ் விக்னேஷ் ராமமூர்த்தி நாயனாக அறிமுகமாகிறார். நிவேதா, மித்ரா நாயகிகளாக நடிக்கின்றனர். கஜராஜ், வின்சென்ட் அசோகன், தர்மா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். செந்தமிழ் இசை அமைக்கிறார். இயக்குனர்களில் ஒருவரான சதீஷ் கீதா குமாரே ஒளிப்பதிவும் செய்கிறார்.
973 days ago
973 days ago
973 days ago