மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
972 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
972 days ago
மாஸ்டர் படத்தை அடுத்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67-வது படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்ற நிலையில் முதல்கட்ட படிப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. என்றாலும் அது குறித்த தகவல்களை படக்குழு ரகசியமாக வைத்திருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டார்கள்.
அந்த வகையில் விஜய் 67வது படத்தில் அவருடன் சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், திரிஷா, பிரியா ஆனந்த் உட்பட பலர் நடிப்பதாக அறிவிக்கப்படுகிறது. குறிப்பாக, கே ஜி எப்- 2 படத்தில் வில்லனாக நடித்து பெரிய அளவில் மிரட்டிய பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், விஜய் 67வது படத்திலும் முக்கிய வில்லனாக நடிப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் வில்லனாக நடிப்பதற்கு அவர் 10 கோடி ரூபாய் சம்பளம் பேசியிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பு நடித்த கே ஜி எப்- 2 படத்தில் நடிப்பதற்கும் இதே 10 கோடி ரூபாய் சம்பளம் அவர் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
972 days ago
972 days ago