ஹாரர் திரில்லராக உருவாகும் வெற்றியின் ‛இரவு'
ADDED : 1211 days ago
‛8 தோட்டாக்கள்' படம் மூலம் கவனம் ஈர்த்தவர் வெற்றி. தொடர்ந்து ஜீவி, ஜீவி 2, ஜோதி, வனம் உள்ளிட்ட வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது அவர் புதிதாக ‛இரவு' என்ற படத்தில் நடிக்கிறார். ஜெகதீசன் சுப்பு இயக்க, முக்கிய வேடங்களில் சந்தானபாரதி, மன்சூர் அலிகான், பொன்னம்பலம், தீபா சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் முதல் பார்வையை தற்போது வெளியிட்டுள்ளனர். சைக்காலாஜிக்கல் நிறைந்த ஹாரர் திரில்லர் படமாக இந்தப்படம் தயாராகிறது.