மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
913 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
913 days ago
நடிகை ஜோதிகா, நடிகர் சூர்யாவை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாகும்வரை நடிப்பிற்கு பிரேக் விட்டிருந்தார். 2015ம் ஆண்டு வெளியான '36 வயதினிலே' படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். அதன்பிறகு மகளிர் மட்டும், நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட பல ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடித்தார். தற்போது மலையாளத்தில் மம்முட்டி ஜோடியாக 'காதல்: தி கோர்க்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்குவர உள்ளது. ஹிந்தியில் 'ஶ்ரீ' என்ற படத்தில் ராஜ்குமார் ராவுடன் நடிக்கிறார். இந்த நிலையில் அடுத்து ஹிந்தியில் 'தாபா கார்டல்' என்ற பெயரில் உருவாகும் வெப் தொடரில் நடிக்க இருக்கிறார். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்த தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இதில் ஜோதிகாவுடன் ஷபானா ஆஸ்மி, சுஜ்ராஜ் ராவ் ஆகியோரும் நடிக்கின்றனர். சோனாலி போஸ் இயக்குகிறார். 5 குடும்ப பெண்களை மையமாக வைத்து இந்த தொடர் தயாராகிறது. படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. ஹிந்தி படங்கள், தொடர்களில் நடிப்பதால் ஜோதிகா மும்பையில் உள்ள தங்களது பூர்வீக வீட்டில் தங்கி உள்ளார்.
913 days ago
913 days ago