பாடகர் டி.எம்.எஸ்ஸிற்கு கவுரவம் : அவரது பெயரில் சாலை திறப்பு
ADDED : 1120 days ago
பழம்பெறும் பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன். எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற இருபெரும் கலைஞர்களை தனது வசீகர குரலால் தாங்கிப் பிடித்தவர், 10 ஆயிரம் திரைப்பட பாடல்களையும், 2500 பக்தி பாடல்களையும் பாடி உள்ளார். சில படங்களில் நடித்தும் இருக்கிறார். இவரின் நூற்றாண்டை போற்றும் விதமாக சென்னை மந்தைவெளியில் அவர் வாழ்ந்த தெருவிற்கு அவரது பெயரை சூட்ட தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி மந்தைவெளி மேற்கு வட்டச்சாலையின் பெயரை டி.எம்.சவுந்தரராஜன் சாலை என்று பெயர் மாற்றம் செய்து அரசாணையும் வெளியிடப்பட்டது. தொடர்ந்து அவரின் பிறந்ததினமான இன்று(மார்ச் 24) அவர் பெயரில் சாலை திறந்து வைக்கப்பட்டது. இதை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் டிஎம்எஸ்., குடும்பத்தினரும் பங்கேற்றனர்.