டப்பிங் யூனியன் சீல் அகற்றம்
ADDED : 1027 days ago
சென்னை, விருகம்பாக்கத்தில் தென்னிந்திய சினிமா, சின்னத்திரை டப்பிங் யூனியன் இயங்கி வருகிறது. இதன் தலைவராக நடிகர் ராதாரவி உள்ளார். அரசு விதிமுறைகளை மீறி இந்த கட்டடம் கட்டப்பட்டதாக புகார் எழுந்ததால் கடந்த மார்ச் 11ல் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுதொடர்பாக கோர்ட்டை நாடினார் சங்க தலைவர் ராதாரவி.
இந்நிலையில் டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் சட்டரீதியாக எடுத்த நடவடிக்கைகளின் பலனாக நீதிமன்ற ஆணையின்படி பொருட்களை எடுக்கவும், இடித்துக் கட்டுவதற்கு விண்ணப்பிக்கவும் இரண்டு வாரங்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் முன்னிலையில் அதிகாரிகள் சீல்லை உடைத்து கட்டடத்தை திறந்தனர். எல்லாம் சரி செய்தபின் இந்த அலுவலகம் மீண்டும் டப்பிங் யூனியன் வசம் நிரந்தரமாக ஒப்படைக்கப்படும்.