பெரும் பட்ஜெட்டில் தயாராகும் நயன்தாராவின் 75வது படம்
நயன்தாரா நடிக்கும் அவரது 75வது படத்தை டிரைடன் ஆர்ட்ஸ் மற்றும் நாட் ஸ்டூடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இயக்குநர் ஷங்கரின் உதவியாளரான நீலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்குகிறார். ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை, படக்குழுவினர் சென்னையில் நடத்தி முடித்து விட்டனர். மேலும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு திருச்சியிலும், சென்னையின் சில பகுதிகளிலும் நடைபெறவுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படமானது இதுவரை நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்தப் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வருவதாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசை அமைக்கிறார்.