பாட்டு பாடி அசத்திய விக்ரமன்! வைரலாகும் வீடியோ
ADDED : 929 days ago
பிக்பாஸ் வீட்டில் எளிய மக்களுக்கான அரசியல் பேசி மக்கள் மனதில் இடம்பிடித்தார் விக்ரமன். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு தொடர்ச்சியாக நேர்காணல், பொது நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகள் என பங்கேற்று சோசியல் மீடியா செலிபிரேட்டியாக மாறிவிட்டார். அவர் தற்போது விடுதலை படத்தில் சூப்பர் ஹிட்டான 'காட்டுமல்லி' பாடலை பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் குவிந்த விக்ரமனின் ரசிகைகள் விக்ரமன் பாடல் பாடியதை புகழ்ந்து பதிவிட்டு 'இன்னும் கொஞ்சம் லைன்ஸ் பாடுங்க' என கேட்டு வருகின்றனர்.