கவினை இயக்குகிறாரா இளன்?
ADDED : 947 days ago
இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர் கவின் நடித்து கடைசியாக வெளிவந்த திரைப்படம் டாடா. விமர்சன ரீதியாக வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின் புதுப்படம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த படம் கொஞ்சம் தள்ளி போவதால் உடனடியாக ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளாராம் கவின். இந்த படத்தை பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குனர் இளன் இயக்கப் போவதாகவும், இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இளன் ஏற்கனவே நடிகர் தனுஷிற்கு ஒரு கதை கூறி காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.