மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
853 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
853 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
853 days ago
மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றி படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் கஸ்டடி என்கிற படத்தை இயக்கியுள்ளார். தெலுங்கு இளம் நடிகர் நாக சைதன்யா இந்த படத்தின் மூலம் தமிழிலும் கால் பதிக்க இருக்கிறார். கூடவே நடிகை கீர்த்தி ஷெட்டியும் இந்த படத்தில் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். வரும் மே 12ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஐதராபாத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளை கஸ்டடி படக்குழுவினர் நடத்தியுள்ளனர்.
இந்த நிகழ்வில் இயக்குனர் வெங்கட் பிரபு பேசும்போது, கஸ்டடி திரைப்படம் நான் இதுவரை செய்திராத புதிய ஜானரில் ஒரு புதிய முயற்சி. குறிப்பாக இந்த படத்தில் வில்லன் சாகக்கூடாது என்பதுதான் ஹீரோவிற்கு கொடுக்கப்பட்ட டாஸ்க். 48 மணி நேரத்தில் நடக்கும் விதமாக கதை உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் படத்தில் ஹீரோவும், வில்லனும் மொத்தமே இரண்டு செட் உடைகள் தான் அணிந்து நடித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் 24 மணி நேரத்திற்குள் நடக்கும் கதையாக உருவாகி இருந்தது. அந்தப் படத்திலும் வில்லன் எஸ்.ஜே சூர்யா படத்தின் நாயகன் சிம்புவை சாக விடாமல் பார்த்துக் கொள்வது தான் அவருக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்காக இருந்தது என்பது ஆச்சரிய ஒற்றுமை.
853 days ago
853 days ago
853 days ago