ரிலீஸ் தேதி உடன் வெளியானது ‛ப்ரோ' படத்தின் முதல்பார்வை
ADDED : 1132 days ago
கடந்த 2021ம் ஆண்டில் தமிழில் சமுத்திரக்கனி இயக்கி, நடித்து நேரடியாக ஓடிடி தளத்தில் வெளிவந்த திரைப்படம் ‛வினோதய சித்தம்'. விமர்சன ரீதியாக பாராட்டை பெற்ற இந்தப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. சமுத்திரக்கனியே இயக்குகிறார். பீபுல் மீடியா பேக்டரி மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பவன் கல்யாண் மற்றும் சாய் தரம் தேஜ் ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ளனர். நேற்று இந்த படத்திற்கு 'BRO' (ப்ரோ) என்ற தலைப்பு வைத்து முதல் பார்வையையும் வெளியிட்டுள்ளனர். கூடுதலாக அந்த போஸ்டரில் வருகின்ற ஜூலை 28 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று ரிலீஸ் தேதியுடன் படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.