அஜித்துக்கு வில்லனாகும் அர்ஜூன் தாஸ்?
ADDED : 860 days ago
துணிவு படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமாரின் புதிய படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி வெளியானது. படத்துக்கு 'விடாமுயற்சி' என தலைப்பு வைத்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்; நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
இதன் படப்பிடிப்பு இந்த வாரம் புனேவில் துவங்கவுள்ளதாகவும், அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில், அஜித்துக்கு வில்லனாக கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் அர்ஜூன் தாஸ் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.