முதல் முறையாக வில்லனாகும் பிரபல இயக்குனர்?
ADDED : 1221 days ago
இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் இயக்குனராக அறிமுகமாகும் படம் மார்கழி திங்கள். இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். புதுமுக நாயகன் ஷாம் செல்வன், நக்ஷா சரண் இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் முதல் முறையாக இயக்குனர் சுசீந்திரன் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தை இயக்குனர் சுசீந்திரன் தான் தனது வெண்ணிலா பிக்சர்ஸ் மூலம் தயாரிக்கிறார்.