லாந்தர்: விதார்த் நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர்
ADDED : 868 days ago
திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் பத்ரி எம் சினிமா என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தயாரிக்கும் படம் 'லாந்தர்'. விடியும் வரை காத்திரு படத்தை இயக்கிய சாஜிசலீம் இயக்குகிறார். விதார்த், சுவேதா டோரத்தி, விபின், சஹானா கவுடா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவை ஞானசௌந்தர் கையாள, சந்தோஷ் நாராயணனிடம் உதவியாளராக பணிபுரிந்த பிரவீன் இசையமைக்கிறார்.
படம் குறித்து பேசிய இயக்குநர் சாஜிசலீம், இது வரை யாரும் சொல்லாத சஸ்பென்ஸ் திரில்லராக உருவாக உள்ளது 'லாந்தர்'. இந்த புதுமையான கதைக்களத்தில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. எனது முதல் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே என் மீதும் கதை மீதும் நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் பத்ரி அவர்களுக்கு நன்றி, என்று கூறினார்.