விஜய் பட பாடலாசிரியர் இயக்கத்தில் நயன்தாரா?
ADDED : 1081 days ago
நடிகை நயன்தாரா திருமணம், குழந்தைகளுக்கு பிறகும் இறைவன், ஜவான் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது தனது 75வது படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து மற்றொரு புதுமுக இயக்குனர் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் புதிதாக முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா ஒரு வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வெப் தொடரை லோகேஷ் கனகராஜ்-ன் உதவி இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்குகிறார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் லியோ படத்தில் இருந்து வெளிவந்த நான் ரெடி பாடலை இவர் தான் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.