குறைகள் காணும் உலகில் நிறைகள் தெரிவதில்லை - தர்ஷா குப்தா
ADDED : 811 days ago
பிரபல நடிகை தர்ஷா குப்தா. சின்னத்திரை சீரியல் மற்றும் டிவி ஷோக்களில் அசத்தி வந்த இவர் இப்போது வெள்ளித்திரையில் நடிகையாக பயணிக்கிறார். சமூகவலைதளத்தில் ஹாட் மாடலாக மாறி அடிக்கடி கவர்ச்சி புயல் வீசி வருகிறார். அண்மையில் தான் டூ பீஸ் உடையில் நிச்சல் குளத்தில் மிகவும் கிளாமரான புகைப்படங்களையும், வீடியோவையும் வெளியிட்டிருந்தார். தற்போது மீண்டும் ஹாட்டான உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், 'குறைகள் காணும் உலகில் நிறைகள் தெரிவதில்லை' என தர்ஷா கேப்ஷன் போட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் சிலர் 'நிறைகள் இல்ல நிறையவே தெரியுது' என தர்ஷா குப்தா அதீத கவர்ச்சி காட்டுவதை கிண்டலடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.