மேலும் செய்திகள்
நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2'
786 days ago
செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு
786 days ago
அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் ஜவான். நயன்தாரா, பிரியாமணி , விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தீபிகா படுகோன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். அனிரூத் இசையமைக்கும் இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி அன்று உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நடிகை கியாரா அத்வானி ஜவான் படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுகிறார். இந்த பாடல்கான படப்பிடிப்பு தற்போது யாஷ் ராஜ் பிலிம் ஸ்டுடியோஸில் நடைபெற்று வருகிறது. இரண்டு, மூன்று நாட்கள் இதன் படப்பிடிப்பு நடைபெறும் என்கிறார்கள்.
786 days ago
786 days ago