மேலும் செய்திகள்
கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்'
794 days ago
சிம்பு மீது அதிருப்தியில் தமன்?
794 days ago
மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி
794 days ago
நடிகர் சூரி முதன்முறையாக கதையின் நாயகனாக மாறி வெற்றிமாறன் இயக்கத்தில் ‛விடுதலை' என்கிற படத்தில் நடித்தார். நடிகர் விஜய்சேதுபதி இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த மார்ச் இறுதியில் வெளியான இந்த படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இரண்டாம் பாகத்திற்கு மீதம் எடுக்கப்பட வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானல் பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மதுரை அருகில் உள்ள நடிகர் சூரியின் சொந்த ஊரான ராஜாக்கூர் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு நடிகர் சூரியும், விஜய் சேதுபதியும் சென்று அம்மன் தரிசனம் செய்துவிட்டு வந்துள்ளனர். தற்போது கோயில் திருவிழா நடைபெறுகிறது என்பதால் கோயிலுக்கு வருகை தந்த அவர்கள், சாமி கும்பிட்டு விட்டு வெளியே வரும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகின்றன.
794 days ago
794 days ago
794 days ago