2018 பட இயக்குனர் உடன் இணைகிறாரா விக்ரம்?
ADDED : 985 days ago
சமீபத்தில் மலையாளத்தில் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் வெளிவந்த படம் 2018 . உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வெளிவந்த இப்படம் மலையாள சினிமாவின் அதிக வசூல் செய்த படமாக மாறி சாதனை செய்தது. இதையடுத்து மலையாளத்தில் நடிகர் ஆசிப் அலியை வைத்து விரைவில் புதிய படத்தை இவர் இயக்கவுள்ளார்.
இதைத்தொடர்ந்து தமிழில் லைக்கா தயாரிப்பில் ஒரு புதிய படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்குகிறார் என சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். இதில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நிவின் பாலி ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இதில் ஹீரோவாக நடிக்க விக்ரம் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.