நீண்ட இடைவேளைக்கு பின் சீரியலில் சரண்யா
ADDED : 858 days ago
தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான சரண்யா துராடி விஜய் டிவியில் ‛நெஞ்சம் மறப்பதில்லை' சீரியலின் மூலம் சின்னத்திரை நடிகையானார். தொடர்ந்து விஜய் டிவியிலேயே சில சீரியல்களில் கமிட்டானார். ஆனால், அந்த தொடர்கள் அனைத்தும் சூழ்நிலையின் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பிறகு வெள்ளித்திரை சின்னத்திரை இரண்டிலுமே நடிப்பதற்காக வாய்ப்புகள் தேடி அலைந்த அவருக்கு தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள புது சீரியலில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனையடுத்து சரண்யாவின் ரசிகர்கள் இந்த சீரியலாவது அவருக்கு நல்லதொரு தொடக்கத்தை தர வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.