அரசியல் படமாக உருவாகும் தனுஷ் நடிக்கும் தெலுங்கு படம்
ADDED : 968 days ago
நடிகர் தனுஷ் தனது 50வது படத்தில் நடித்து முடித்தவுடன் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனது 51வது படத்தில் நடிக்கவுள்ளார். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் நாகார்ஜூனா நடிக்கிறார் என நேற்று அறிவித்தனர். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.
தற்போது இந்த படத்தின் கதையை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அரசியல், த்ரில்லர் கதை களத்தில் உருவாகும் இந்த படத்தில் அரசியல் கட்சி தலைவராக தனுஷ் நடிக்கவுள்ளார். இது 40 வருடத்திற்கு முன்பு நடைபெறும் கதைகளம் என்கிறார்கள். இப்போது மற்ற நடிகர், நடிகை, டெக்னீசியன் தேர்வு பணி நடைபெற்று வருகிறது.