மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
679 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
679 days ago
தமிழ்த் திரையுலகத்தில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர் த்ரிஷா. 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் அவரது அழகைப் பார்த்து மயங்கியவர் பலர். இவ்வளவு ஆண்டுகள் கடந்த பின்னும் இன்றைய இளம் கதாநாயகிகளுக்கு சரியான போட்டியாக இருக்கிறாரே என்று திரையுலகினரே ஆச்சரியப்பட்டார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விஜய் ஜோடியாக 'லியோ' படத்தில் நடித்தார் த்ரிஷா. இருவருக்கும் இடையே படத்தில் முத்தக் காட்சிகள் இருந்ததும் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விஜய்யுடன் 'லியோ' படத்தில் நடித்த பின் அஜித்துடன் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார்.
'லியோ' படத்தின் ஒரு வார வசூலைத் தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்டது. அதைப் பகிர்ந்து 'அப்படி போடு' என தனது ஆனந்தத்தை வெளிப்படுத்தியுள்ளார் த்ரிஷா. மேலும், 'லியோ' படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், மற்றும் வீடியோக்களை இன்று பகிர்ந்துள்ளார்.
679 days ago
679 days ago