'தூம்' படங்களின் இயக்குனர் சஞ்சய் காத்வி திடீர் மரணம்
ADDED : 682 days ago
பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற தூம், தூம் 2 படங்களை இயக்கியவர் சஞ்சய் காத்வி. இதுதவிர தேரே லியே, மேரே யார் கி ஷாதி ஹே, கிட்னாப், அஜப் கப்சே லவ், ஆபரேஷன் பரிண்டே படங்களை இயக்கினார். குறைவான படங்களை இயக்கி இருந்தாலும் அவைகள் அனைத்தும் முக்கியமான படங்களாக இருந்தது.
56 வயதான சஞ்சய் காத்வி மும்பையில் தனது மனைவி ஜினா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். எந்த உடல்நல பிரச்னையும் இல்லாத அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். சஞ்சய் காத்வி மறைவு பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.