திஷா பதானி வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்
ADDED : 694 days ago
2016ல் பாலிவுட்டில் தோனியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான எம்.எஸ்.தோனி அண்டோல்டு ஸ்டோரி என்ற படத்தில் பிரபலமானவர் திஷா பதானி. அதைத்தொடர்ந்து பாலிவுட்டில் ‛‛பாஹி-3, ஏக் வில்லன் ரிட்டன்ஸ், ராதே'' என பல படங்களில் நடித்தார். தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‛கங்குவா' படம், பிரபாஸ் - கமல் - அமிதாப் பச்சன் நடித்து வரும் ‛கல்கி 2898 ஏடி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தனது சோசியல் மீடியா பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படம், வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ள திஷா பதானி, தற்போது வெள்ளை நிறம் உடையணிந்த கவர்ச்சியாக எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.