மேலும் செய்திகள்
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
640 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
640 days ago
த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி!
640 days ago
மலையாளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மம்முட்டி ஜோதிகா இருவரும் இணைந்து நடித்த 'காதல் ; தி கோர்' என்கிற படம் வெளியானது. குடும்ப கதை அம்சத்துடன் வெளியான இந்த படத்திற்கு விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு மற்றும் பாராட்டுக்கள் கிடைத்தன. குறிப்பாக மம்முட்டியின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோழிக்கோடில் உள்ள ஒரு தனியார் கல்லூரி நிர்வாகம் “இன்றைய நாட்களில் மலையாள சினிமாவில் இருக்கும் மறைமுக அரசியல்” என்கிற தலைப்பில் ஒரு விவாதத்தை துவங்கி நடத்த சிறப்பு விருந்தினராக இந்த படத்தின் இயக்குனர் ஜியோ பேபியை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தது.
அவரும் அந்த அழைப்பை ஏற்று கோழிக்கோடு வந்த நிலையில் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அவரிடம் சொல்லப்பட்டது. அதற்கு காரணம் ஜியோ பேபி பொதுவெளியில் கூறும் கருத்துக்கள் சமூக அளவில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை என மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதால் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது என மாணவர்கள் அமைப்பு மூலமாக அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து இயக்குனர் ஜியோ பேபி கூறும்போது, “என் கருத்துக்கள் காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது என்று சொல்வதை நான் அவமானமாக உணர்கிறேன். இது குறித்து விவரம் அறிய கல்லூரி முதல்வரை தொடர்பு கொண்டால் இப்போது வரை அவர் போனை எடுக்கவில்லை. நாளை இதுபோன்று வேறு ஒரு இயக்குனருக்கு நடக்க கூடது என்பதால் இது குறித்து கல்லூரி நிர்வாகம் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்த படத்தில் இயக்குனர் ஜியோ பேபி ஓரினச் சேர்க்கையாளர்களின் வாழ்க்கை பற்றி சொல்லியிருந்தது தான் இந்த அளவிற்கு சர்ச்சை வெடிக்க காரணம் என்று சொல்லப்படுகிறது.
640 days ago
640 days ago
640 days ago