மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
632 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
632 days ago
பிரபாஸ் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'சலார்'. இதன் முதல் பாகம் வருகிற 22ம் தேதி வெளிவருகிறது. பிரசாந்த் நீல் இயக்கி உள்ள இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரவி பர்சூர் இசை அமைத்துள்ளார். புவன் கவுடா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அது 'கேஜிஎப்' படத்தின் பாணியில் இருப்பதாக விமர்சனம் எழுந்தது. தற்போது படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கி உள்ளது.
இதுகுறித்து தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “இரண்டு நண்பர்களுக்கு இடையேயான பிணைப்பை சொல்லும் படம் இது. 2 மணி நேரம் 55 நிமிடங்கள் ஓடும். இந்த அதிரடி ஆக்ஷன் படத்திற்கு சென்சார் போர்டு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தில் பல ரத்தக் களரியான ஆக்சன் காட்சிகள், வன்முறை மிகுந்த அதிரடி காட்சிகள் நிறைய உள்ளது. 'ஏ' சர்டிபிகேட் எனும் முத்திரையே படத்தின் ஆக்ஷன் அளவை பிரதிபலிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
632 days ago
632 days ago