உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நீண்ட நாள் கஷ்டப்பட்டு நடித்த படம்: பிரணா

நீண்ட நாள் கஷ்டப்பட்டு நடித்த படம்: பிரணா

ராம்தேவ் இயக்கத்தில் கே.பாக்யராஜ், சோனியா அகர்வால், நடித்துள்ள 'மூன்றாம் மனிதன்' என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார் பிரணா. படம் நாளை வெளிவருகிறது. முதல் படத்திலேயே 8 வயது மகனுக்கு தாயாக நடித்திருகிறார்.

இதுகுறித்து பிரணா கூறும்போது “இந்த படம் பட்ஜெட் படம் என்பதைவிட நிறைய பேருடைய உழைப்பு இதில் இருக்கிறது. நிறைய புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். நானே ஒரு புதுமுகம்தான். நிறைய கெட்டப், நிறைய நடிப்பு முக்கியமாக இந்த சமுதாயத்துக்கு தேவைப்படுகிற ஒரு கதை இந்த படத்தில் இருக்கிறது.

நடைமுறையில் இருக்கிற ஒரு சம்பவத்தை கதையாக உருவாக்கி இருக்கிறோம். இது ஒரு நீண்ட நாள் படைப்பு, கஷ்டபட்டு உருவாக்கி இருக்கிறோம். இதுபோன்ற சின்ன படங்கள் தியேட்டர்ல மக்கள் பார்க்காமல் அப்படியே போய் விடுகிறது. சின்ன படமோ, பெரிய படமோ அதை மக்கள் தியேட்டரில் சென்று பார்க்க வேண்டும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !