உலகளவில் ரூ.500 கோடி வசூலை கடந்த சலார்
ADDED : 781 days ago
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வெளிவந்த படம் 'சலார்'. ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்தனர். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக வெளிவந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதன் பாதிப்பு தற்போது வசூலிலும் தெரிகிறது.
இந்த நிலையில் இத்திரைப்படம் வெளிவந்த கடந்த 6 நாட்களில் உலகளவில் ரூ. 500 கோடி வசூலை எட்டியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஆனாலும், இத்திரைப்படம் நஷ்டத்தில் முடிய வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.