சூரியின் ‛கருடன்' படப்பிடிப்பு நிறைவு!
ADDED : 800 days ago
நடிகர் சூரி, விடுதலை படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'கருடன்' என்கிற முழு நீள ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் கதையில் உருவாகும் இந்த படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, உன்னி முகுந்தன், ரேவதி ஷர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு கும்பகோணம், தேனி போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக சமுத்திரக்கனி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.