பின்னணி பாடகர் வீரமணிதாசனுக்கு 'ஹரிவராசனம்' விருது
ADDED : 821 days ago
தமிழகத்தை சேர்ந்த பிரபல பக்தி பாடகர் வீரமணிதாசன். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 6 ஆயிரம் பக்தி பாடல்கள் பாடி உள்ளார். பல திரைப்படங்களில் பக்தி பாடல்களை பாடி உள்ளார். இசை கலைஞர்களுக்கு கேரள அரசு வழங்கும் உயரிய விருது 'ஹரிவராசனம்' விருது. சபரிமலை அறங்காவல் அமைப்பும், கேரள அரசும் இணைந்து இந்த விருதை வழங்கி வருகிறது. இதற்கு முன்பு கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், இளையராஜா, கங்கை அமரன் உள்ளிட்ட பலர் இந்த விருதை பெற்றுள்ளனர். இந்த ஆண்டு இந்த விருது வீரமணிதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சபரிமலை சன்னிதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் வீரமணிதாசனுக்கு ஹரிவராசனம் விருதை மாநில அறநிலையத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் வழங்கினார். விருதுடன் 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.