கார்த்தி 27வது படத்தின் தலைப்பு குறித்து தகவல் இதோ
ADDED : 996 days ago
கார்த்தி நடிப்பில் ‛ஜப்பான்' படம் தீபாவளிக்கு வெளியானது. ஆனால் படம் தோல்வியை தழுவியது. தற்போது '96' பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி தனது 27வது படத்தில் நடிக்கின்றார். இதனை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் கார்த்தி, அரவிந்த்சாமி இருவரை சுற்றி நடைபெறும் குடும்ப கதை என கூறப்படுகிறது. ஏற்கனவே இதன் படப்பிடிப்பு கும்பகோணத்தில் தொடங்கியது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு 'மெய்யழகன்' என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.