மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
595 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
595 days ago
பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு
595 days ago
விடுதலை படத்திற்கு பின் கதாநாயகனாகவும் தொடரும் சூரி தற்போது துரை செந்தில் குமார் இயக்கத்தில் கருடன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன் முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர். வெற்றிமாறனின் கதையை துரை செந்தில் குமார் இயக்கி உள்ளார். ஷிவதா, ரோஷினி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோவான அறிமுக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் செங்கல் சூளையில் கம்பீரமாக அமர்ந்துள்ளனர் சசிகுமார், உன்னி முகுந்தன். அங்கே தவறு செய்த சிலர் அருகில் இருக்க அதிலிருந்து ஒருவர் தப்பித்து ஓடுகிறார். அவரை சூரி பிடிப்பது போன்று வீடியோ உள்ளது.
வீடியோவில் ‛‛விஸ்வாசத்துல மனுஷங்களுக்கும் நாய்க்கும் போட்டி வந்தா எப்பவும் நாய் தான் ஜெயிக்கும். அதே நாய்க்கும் சொக்கனுக்கும் போட்டி வந்தா ஜெயிக்கிறது என்னைக்குமே சொக்கன் தான்'' என்ற வசனம் சொக்கன் வேடத்தில் நடிக்கும் சூரியையும், அவரின் விஸ்வாசத்தையும் குறிக்கிறது. யுவனின் பின்னணி இசை அதற்கு பக்க பலமாக உள்ளது. செங்கல் சூளையின் பின்னணியில் கதைக்களம் இருக்கலாம் என தெரிகிறது.
595 days ago
595 days ago
595 days ago