கார்த்தி படத்தில் இணைந்த ரத்ன குமார்
ADDED : 802 days ago
மேயாத மான் படத்திற்கு பிறகு ரத்ன குமார் இயக்கிய ஆடை, குளு குளு ஆகிய படங்கள் தோல்வியடைந்தன. இது அல்லாமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற படங்களில் அசோசியேட் இயக்குனராகவும் மற்றும் திரைக்கதையிலும் உதவியாகவும் இருந்தார். இவர் மீண்டும் இயக்குனர் பக்கம் திரும்பி படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகவுள்ள 'சர்தார் 2' படத்தில் ரத்ன குமார் வசனம் மற்றும் திரைக்கதை உதவியாளராக பணிபுரிந்து வருவதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.