வணங்கான் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ADDED : 869 days ago
பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து வரும் படம் 'வணங்கான்'. இதனை பாலாவின் பீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் வி அவுஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இதில் ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு திருவண்ணாமலை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்தது. தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வருகின்ற பிப்ரவரி 19ம் தேதி அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.