'சூர்யாவின் சாட்டர்டே' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!
ADDED : 926 days ago
'அண்டே சுந்தரனிகி' படத்திற்கு பிறகு இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சரிபோதா சனிவாரம்'. தமிழில் 'சூர்யாவின் சாட்டர்டே' என தலைப்பு வைத்துள்ளனர். இதில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டிவிவி என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜெக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.
கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு பல கட்டமாக ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நானியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்திலிருந்து க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்று எஸ்.ஜே. சூர்யா பின்னனி குரலோடு வெளியாகியுள்ளது. கூடுதலாக இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 29ந் தேதி திரைக்கு வருகிறது என ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.