தமிழுக்கு வரும் சுராஜ் வெஞ்சாரமூடு
ADDED : 590 days ago
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. மலையாளத்தில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். 2013ம் ஆண்டு 'பெரியாதவர்' என்ற படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார். இதுதவிர 4 முறை மாநில விருது பெற்றார்.
தற்போது விக்ரம் நடிக்கும் அவரது 62வது படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இதனை தயாரிப்பு தரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தை அருண்குமார் இயக்குகிறார் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார்.
ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார். படத்தின் முன்தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.