ரிஷிகேஷில் வசிஷ்ட குகையில் ரம்யா பாண்டியன் தியானம்
ADDED : 568 days ago
நடிகை ரம்யா பாண்டியன் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் ரிஷிகேஷ் சென்ற அவர், அங்குள்ள வசிஷ்ட குகையில் தியானம் செய்தபோது தனக்கு கிடைத்த அனுபவங்களை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். அதில், ‛‛வசிஷ்ட குகையின் சாந்தத்தில் மூழ்கினேன். எனது முதல் குகை தியான அனுபவத்தின் காட்சிகளைப் பகிர்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.