மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
533 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
533 days ago
விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித் குமார் இதையடுத்து குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்கப் போகிறார். சினிமா தவிர பைக் ரைடிங் செய்வதில் தீவிர ஆர்வம் காட்டி வரும் அஜித், தனது ஓய்வு நேரங்களில் நண்பர்களுடன் பைக் சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பு ஓய்வு இடைவெளியில் தன்னுடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் ஆரவ் உள்ளிட்ட தனது நண்பர்களுடன் மத்திய பிரதேச மாநிலத்தில் பைக் ட்ரிப் செய்து வருகிறார் அஜித். சக நண்பர்களுக்கு தனது கையாலே கமகம பிரியாணி சமைத்துக் கொடுத்திருக்கிறார் அஜித். அது குறித்து வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தில் நடித்த பிறகு இரண்டு ஆண்டுகள் நடிப்புக்கு ஓய்வு கொடுத்துவிட்டு தனது உலக பைக் சுற்றுலாவை நடத்த அஜித் குமார் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
533 days ago
533 days ago