மேலும் செய்திகள்
மார்க்கெட்டை பிடிக்க உத்தரவாதம் கொடுக்கும் நடிகை
533 days ago
27 ஆண்டு போராட்டம் இப்போ சினிமா ஹீரோ
533 days ago
சூர்யாவும், ஜோதிகாவும் காக்க காக்க, பேரழகன், சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் இணைந்து நடித்தனர். பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகும் தமிழில் நடித்து வந்த ஜோதிகா, சைத்தான் என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் ரீ என்ட்ரி கொடுத்தார். அடுத்தடுத்து ஹிந்தியில் புதிய படங்களில் நடிப்பதற்காக தீவிரமாக கதைக்கேட்டு வரும் ஜோதிகா, தான் வெறித்தனமாக உடற்பயிற்சியில் ஈடுபடும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் இன்ஸ்டாவில் சூர்யாவின் ரசிகை ஒருவர், சில்லுனு ஒரு காதல் படத்தில் ஒரு நாளைக்கு மட்டும் சூர்யாவை ஐசுவிடம் கொடுத்தது போன்று எனக்கும் சூர்யாவை தருவீர்களா? என்று ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார். இதற்கு ஜோதிகா, ‛‛ஒரு நாளும் அதற்கு அனுமதிக்கவே மாட்டேன். சினிமா வேறு ரியல் லைப் வேறு'' என்று அந்த ரசிகைக்கு ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார் .
533 days ago
533 days ago